15 மார்ச் 2012: லுவேன்,
இனவாதத்துக்கு எதிரான மாணவர் இயக்கமான NSV யின் வருடாந்திர ஆர்ப்பாட்டம் 15ம் திகதி மார்ச் 2012 ல் நடக்க உள்ளது.
பல நூற்றுக்கணக்கான மக்கள் பங்குபற்றும் இந்த அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் LSP போன்ற பல்வேறு அமைப்புகள் பங்கேற்க இருக்கிறார்கள்.
இனவாதம் மற்றும் பாசிசதிக்கு எதிர்ப்பை தெரிவிப்பதே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்.
ஐரோப்பாவில் சிறுபான்மையினருக்கு ஆபத்தான நிலமை உருவாகி வருகிறது. கடந்த கோடைக் காலத்தில் Anders Behring Breivik, என்ற ஒரு துவேசி நோர்வேயில் 77 பேர்களைப் படுகொலை செய்திருந்தது அறிந்திருப்பீர்கள். LSP யின் ஊறுப்பினர்கள் பலர் அதற்கெதிரான போராட்டங்களை செய்திருந்தனர்.
வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கும் இன்றய காலகட்டத்தில் இனவாதம் எம்மை பிரித்து பலவீனப்படுத்தும் வேலையை செய்கிறது. நாம் அனைவருக்குமான வேலைவாய்ப்பு, மற்றும் கல்வி வசதிகள், வீட்டு வசதிகள் முதலிய அடிப்படை வசதிகளுக்காக குரல்கொடுக்கிறோம். அனைத்து தொழிலாளர் வர்க்கத்தினதும் ஒற்றுமையை முன்வைக்கும் இந்த போராட்டம் இனவெறியை முறியடிக்க வல்லது.
தமிழ் பேசும் மக்கள் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாக நமக்கெதிரான துவேசத்தை சரியான முறையில் எதிர்கொள்ள முடியும் என்பது மட்டுமின்றி இலங்கையில் எமக்கெதிராக இனவெறி தாக்குதலுக்கு எதிரான ஆதரவையும் திரட்ட முடியும்.
15 மார்ச் மாத ஆர்ப்பாட்டத்தில் ஒன்றினைவோம். அனைவருக்குமான கல்வி, வீட்டு வசதிகளுக்காக போராடுபோம். துவேசத்தின் பலத்தை உடைப்போம். தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக ஈழத்திலும் இங்கும் நிகழும் கொடுமைகளுக்கு எதிரான ஆதரவை திரட்டுவோம்.